
தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.
மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி நேரம் முன்கூட்டியே மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ளது.
இரவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வி. சாலை பகுதியிலிருந்து வெளியேறும் என்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், மக்கள் அவதியுறுவதைத் தடுக்கும் வகையிலும் முன்கூட்டியே மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலை பகுதியில் இன்று (அக். 27) நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.