தவெக மாநாட்டில் நெகிழ்ச்சி! பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்

பெற்றோரிடம் ஆசி பெற்றபின் உரையை தொடங்கினார் விஜய்...
தவெக மாநாட்டில் நெகிழ்ச்சி! பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்
Updated on
1 min read

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு விஜயை பேச அழைத்தபின், உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கிய விஜய், முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரை கட்டித் தழுவினார். அதன்பின், தனது தாயார் ஷோபனாவிடமும் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, மேடை ஏறிய விஜய் தற்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com