ஒகேனக்கல் அருவிகளில் 2 வாரங்களுக்குப் பின் குளிக்க அனுமதி!

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
நீர்வரத்து குறைவினால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
நீர்வரத்து குறைவினால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
Updated on
1 min read

பென்னாகரம், அக்.29: காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளது. மழைப் பொழிவு குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவானது திங்கள்கிழமை (அக்.28) மாலை நிலவரப்படி, விநாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த 16 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்3த நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மீண்டும் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் மிதமான அளவில் பாயும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com