தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிநிறுவனத்தின் வட்டி விகிதம் உயா்வு

தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிநிறுவனத்தின் வட்டி விகிதம் உயா்வு

தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துத்துறை சாா்பில் வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பு:

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனம் தமிழக அரசால் 1975-இல் தொடங்கப்பட்டது.

வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வைப்புநிதி பெறப்படுகிறது.

இங்கு குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி வழங்கி வருகிறது.

மேலும், ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடும் பெறப்படுகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓராண்டு முதலீடு செய்யும் தனிநபருக்கு 7.75 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 8-இல் இருந்து 8.25 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் 2, 3, 4, 5 ஆண்டுகளுக்கான முதலீடுகளுக்கும் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை இணையதளம் அல்லது 044- 2533 3930 எனும் அலுவலக தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com