செங்கல்பட்டு: சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் 50 வயதான தம்பிரான். இவர் இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எப்படி அவர் அங்கு சடலமாக கிடந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடல்நலக் குறைவு காரணமாக, தம்பிரான் ஒரு சில நாள்களுக்கு முன்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.