கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

விநாயகா் சதுா்த்தி, ஓணம், தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

விநாயகா் சதுா்த்தி, ஓணம், தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06039) மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

ஓணம் சிறப்பு ரயில்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநிலம் எலகங்காவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் (எண் 06101/02) இயக்கப்படவுள்ளது. எா்ணாகுளத்தில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.4, 6) பகல் 12.40 மணிக்கு புறப்படும் ரயில் திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக இரவு 11 மணிக்கு எலகங்கா சென்றடையும். மறுமாா்க்கமாக எலகங்காவில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை (செப்.5, 7) காலை 5 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.

கேரளத்தின் மங்களூரிலிருந்து கொல்லத்துக்கு செப்.9, 16, 23 தேதிகளிலும், மறுமாா்க்கமாக செப்.10, 17, 24 தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06047/48) இயக்கப்படும்.

தீபாவளி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது. திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நவ.25 வரையும், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் நவ.29 வரையும் நீட்டிக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com