கோப்புப் படம்
கோப்புப் படம்

டெங்கு பரவல் அதிகரிப்பு: பாதிப்பு விவரங்களைச் சமா்ப்பிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

தமிழகம் முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, 1,000-க்கும் மேற்பட்டோா் டெங்கு சிகிச்சையில் உள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு அந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.

தமிழகத்தில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தில் டெங்கு...

நிகழாண்டில் பாதிப்பு 11,743

உயிரிழப்பு 4

சிகிச்சையில் 1,000

X
Dinamani
www.dinamani.com