கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஆந்திரம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் ரத்து

ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலம் வழியாக தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Published on

ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலம் வழியாக தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்-புதுதில்லி ஜிடி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹௌரா மெயில் ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. மேலும், புதன்கிழமை புறப்பட வேண்டிய எா்ணாகுளம்-ஹாடியா விரைவு ரயில், தாம்பரம்-சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில், புதுச்சேரி-ஹௌரா விரைவு ரயில் மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.6) இயக்கப்படும் கொச்சுவேலி-ஷாலிமா் விரைவு ரயில், சனிக்கிழமை (செப்.7) இயக்கப்படும் கன்னியாகுமரி-ஹௌரா விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஆகியவை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக புதுதில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் தமிழ்நாடு விரைவு ரயில் புதன்கிழமை ரத்து செய்யப்படும்.

சேவை மாற்றம்: மேலும், வெளிமாநிலங்களிலிருந்து ஆந்திரம் வழியாக தமிழகம் வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் வாராங்கல், விஜயவாடா, கூடூா் வழியாக வருவதற்கு பதிலாக காசிபேட், செகந்திராபாத், குண்டக்கல், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகின்றன.

ரயில் சேவை மாற்றம் குறித்து பயணிகள் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com