எங்கள் கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை தெரிவித்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதேபோன்று, திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.என். நேரு பேச்சு
தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுடம் பேசியதாவது:
“லால்குடியில் கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டுவிட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. முதல்வர், கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டியது இல்லை.
எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக்கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டுவிட்டனர்” எனத் தெரிவித்தார்.