வேளாங்கண்ணிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கோவா மாநிலம் மட்கானில் இருந்து வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மட்கானில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்.6) பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 01007) மறுநாள் பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமை (செப்.7) இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் சென்றடையும்.
இந்த ரயில் உடுப்பி, மங்களூரு, காசா்கோடு, பையனூா், கண்ணூா், கோழிக்கோடு, ஷோரனூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும்.
தன்பாத், விசாகப்பட்டினம்: பண்டிகை காலத்தை முன்னிட்டு, தன்பாத், விசாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவைக்கு ஜன.1-ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 03325) இயக்கப்படும். மறுமாா்க்கமாக கோவையில் இருந்து செப்.7 முதல் ஜன.4-ஆம் தேதி வரை சனிக்கிழமைதோறும் இந்த ரயில் இயக்கப்படும்.
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு செப்.7 முதல் நவ.30-ஆம் தேதி வரை சனிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 08557) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு செப்.8 முதல் டிச.1-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 08558) இயக்கப்படும்.
விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லத்துக்கு புதன்கிழமை தோறும், மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வியாழக்கிழமைதோறும் (நவ.28-ஆம் தேதி வரை) சிறப்பு ரயில் இயக்கப்படும்.