11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மேட்டூர் அணை நீர்வரத்து 11,736 கனஅடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,736 கனஅடியாக குறைந்துள்ளது.

News image

மேட்டூர் அணை(கோப்புப்படம்)

Updated On :9 செப்டம்பர் 2024, 3:03 am

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,736 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி இன்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 16,194 கனஅடியிலிருந்து வினாடிக்கு 11,736 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 115.93 அடியிலிருந்து 115.45 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 86.39 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.