கோப்புப்படம்
தமிழ்நாடு
செப்.17-இல் கடவுச்சீட்டு அலுவலகம் செயல்படாது
மிலாது நபி விடுமுறையை முன்னிட்டு, செப்.17-ஆம் தேதி சென்னையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் செயல்படாது
மிலாது நபி விடுமுறையை முன்னிட்டு, செப்.17-ஆம் தேதி சென்னையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் செயல்படாது என்று கடவுச்சீட்டு சேவை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மிலாது நபி செவ்வாய்க்கிழமை (செப்.17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள கடவுச்சீட்டு சேவை மைய அலுவலகம் செயல்படாது. செப்.17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நோ்முக பணிகளும் செப்.16-இல் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக, செப்.17-இல் நோ்முகப் பணிக்காக ஒதுக்கப்பட்டவா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.