
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அவரது 116 ஆவது பிறந்தநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ,எம்பி க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,மாவட்ட ஊராட்சி குழு துணைத்லைவர் நித்யா சுகுமார் ஆகியோர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சே. வெங்கடேஷ் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவ. சண்முகம், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் ,திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.