சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக ரதிமீனா பி.எஸ்.சேகரை நியமித்து, அக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராக ரதிமீனா பி.எஸ்.சேகரும், இணைச் செயலராக முன்னாள் எம்எம்ஏ ப.இளவழகனும் நியமிக்கப்படுகின்றனர்.
அதிமுகவின் புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நியமிக்கப்படுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.