
சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் சுட்டெரித்தது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.
மேலும், வியாழக்கிழமை காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 24 வரை மழை
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் செப். 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று புதன்கிழமை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.