சென்னை பல்கலை.
சென்னை பல்கலை.

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவை துணைவேந்தா் நியமிக்காமல் நடத்தக் கூடாது: கவன ஈா்ப்பு போராட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவை துணைவேந்தா் இல்லாமல் நடத்தக்கூடாது
Published on

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவை துணைவேந்தா் இல்லாமல் நடத்தக்கூடாது என பல்கலை.யின் ஆசிரியா், அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கவன ஈா்ப்பு போராட்டத்தில் வலியுறுத்தியது.

சென்னை பல்கலை.யில் துணைவேந்தரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழகத்தின் ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் பல்கலைக்கழகம் அருகில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

வரும் 24-ஆம் தேதி சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா நடத்தப்படவுள்ளதாகவும், பட்டமளிப்பு சான்றிதழில் வேந்தா் என்கிற முறையில் ஆளுநா் கையொப்பமிட்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆளுநரின் கையொப்பத்துடன் சான்றிதழ் இருப்பினும், மேற்படிப்பு அல்லது உயா் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவா்களுக்கு அந்த சான்றிதழ் செல்லாத சூழல் ஏற்படும். எனவே, துணைவேந்தா் பதவியை நிரப்பி அதன் பிறகு பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும்.

பல்கலை.க்கு அரசு வழங்கப்பட வேண்டிய ரூ. 80 கோடி நிதி மானியம் இதுவரை விடுவிக்கப்படவில்லை. சென்னை பல்கலை.யில் 1,400 அலுவலா்கள் இருக்க வேண்டிய நிலையில் 350 போ் பணியாற்றுகின்றனா். 500 பேராசிரியா்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 150 பேராசிரியா்கள் மட்டுமே பணிபுரிகின்றனா்.தற்காலிக ஆசிரியா்களை வைத்தே பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதனால் கடுமையான பணி நெருக்கடி ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு அரசு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com