ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, தில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரையில் 25 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில் ரெளடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் இறந்தாா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, தில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவரான ரௌடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கெனவே இவ்வழக்கில் வழக்கில் தொடர்புடைய 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.