
மாவட்டவாரியாக பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள், முதன்மை கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்யும்பொருட்டு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாதத்திற்கு ஒருமுறையாவது ஆய்வு செய்யவும் ஆய்வு அறிக்கையை 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு பள்ளியில் முறைகேடாக மாணவர்கள் எண்ணிக்கையைப் பதிந்து நலத்திட்ட உதவி பெற்றது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான மாவட்ட கல்வி அலுவலர், இணை அலுவலர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாதம் ஒருமுறை தங்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்டத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு சென்று சேர்கிறதா? அதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.