தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் பேரவைத் தொகுதியில் இன்று (செப். 24) பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.
கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு துவக்கப் பள்ளி, மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.