
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் ஒரு கார் நின்றிருந்ததைப் பார்த்த பொது மக்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்ததில், காருக்குள் ஐந்து பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக, தடயவில் மற்றும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தனர்.
முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அவர்களது உடல்கள் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஐவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.