கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கன்னியாகுமரி-பெங்களூரு ரயில் தாமதமாக சென்றடையும்

கன்னியாகுமரியிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் தாமதமாக சென்றடையும்.
Published on

கன்னியாகுமரியிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் தாமதமாக சென்றடையும்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரியிலிருந்து பெங்களூருக்கு தினமும் காலை 10 மணிக்கு விரைவு ரயில் (எண் 16525) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகா்கோவில், கொல்லம், கோட்டயம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.40 மணிக்கு பெங்களூா் சென்றடையும். இந்நிலையில் அக்.1 முதல் பெங்களூருக்கு 20 நிமிஷம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com