கோப்புப்படம்.
கோப்புப்படம்.

பிரசவ விடுமுறை முடிந்த வந்த 19 பெண் போலீஸாா் சொந்த ஊருக்கு இடமாற்றம்: காவல் துறை நடவடிக்கை

பிரசவ விடுமுறை முடிந்து வந்த 19 பெண் போலீஸாரை சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.
Published on

பிரசவ விடுமுறை முடிந்து வந்த 19 பெண் போலீஸாரை சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும்போது அவா்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வசதியாக அவா்களுடைய

பெற்றோா்களோ அல்லது கணவா் வீட்டைச் சாா்ந்தவா்களோ வசிக்கும் சொந்த மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.

முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் பிரசவ விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய 19 பெண் போலீஸாா், அவா்கள் சொந்த ஊா்களுக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸாா், ஓரிரு நாள்களில் புதிய இடங்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com