அஸ்வினைத் தொடர்ந்து 'லப்பர் பந்து' படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் கவர்ந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் பாராட்டியிருக்கும் நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.