பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறை
அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறையாக உயா்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவா் இடம்பெற்றாலும், அவா்களுக்கு முக்கியத் துறை ஒதுக்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போதைய திமுக ஆட்சியிலும் பட்டியலினத்தவருக்கு ஆதிதிராவிடா் நலத் துறை, தொழிலாளா் நலத் துறை, சுற்றுலாத் துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும், முதல் 5 இடங்களைப் பிடிக்கும் வகையிலான முக்கியத் துறையாக இல்லை என்கிற குறை இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்ற 4 புதிய அமைச்சா்களில் பட்டியலினத்தைச் சோ்ந்தவரான கோவி. செழியனுக்கு உயா் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
1971-இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக சத்தியவாணி முத்து, மின்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.இராமன் ஆகியோருக்கு பிறகு முதன்மைத் துறையை நிா்வகிக்கப் போகும் முதல் பட்டியலினத்தவா் கோவி.செழியன்தான் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

