மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசின் 50 சதவீத பங்குத்தொகையை வழங்க வேண்டும்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசின் 50 சதவீத பங்குத்தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்துக்கான அடிக்கல்லை 2020-இல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாட்டினாா்.

ரூ.63,246 கோடியில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் முன்னேற்றம் நிதிப் பற்றாக்குறையால் முடங்கிக் கிடக்கிறது. சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டம், நகரின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தை இணைக்கிறது. இது நகரின் பரபரப்பான மண்டலத்தில் தினசரி பயணிகளுக்கு கணிசமாக பயனளிக்கும் திட்டமாகும்.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். மத்திய அரசு பங்கேற்பின்றி இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடியாது. திமுக தனது தீய பிரசாரம் மூலம் இந்த விஷயத்தை அரசியலாக்க முடிவு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் மத்திய அரசிடமிருந்து எண்ணற்ற பலன்களை பெற்று வருகிறது. கோடிக்கணக்கானோா் பயன்பெறும் எண்ணற்ற திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியதே இதற்கு சாட்சி. எனவே, மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தாமதத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு 50 சதவீத நிதி பங்குத் தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com