அரசியல் கட்சித் தொடக்கமா? விஷால் அறிக்கை

அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து, நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால்
நடிகர் விஷால்
Published on
Updated on
2 min read

அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து, நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற தன் 34-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தான் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் - 2 பணிகளில் ஈடுபட இருக்கிறார். 

இந்த நிலையில், நடிகர் விஜய்யை தொடர்ந்து, விஷாலும் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் பரவி வந்தன.

விஷால் தனது ரசிகர் மன்றத்தை  ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்ததால், விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், அரசியல் கட்சி விவகாரத்தில் விளக்கம் அளித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஷால் வெளியிட்ட அறிக்கை:

“சமூகத்தில்‌ எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில்‌ ஒருவனாக அந்தஸ்தும்‌ அங்கீகாரமும்‌ அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும்‌ கடமைப்பட்டுள்ளேன்‌.

என்னால்‌ முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ இருந்தே என்னுடைய ரசிகர்‌ மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய்‌ கருதாமல்‌ மச்களுக்கு நன்மை செய்ய வேண்டும்‌ என்று எண்ணினேன்‌, 
"இயன்றதை செய்வோம்‌ இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில்‌ நற்பணி இயக்கமாக செயல்படுத்தனோம்‌. அடுத்த கட்டமாக மக்களின்‌ முன்னேற்றத்தற்க்காக மக்கள்‌ நல இயக்கத்தை உருவாக்க மாவட்டம்‌, தொகுதி, கிளைவாரியாக மக்கள்‌ பணி செய்வதுடன்‌, என்‌ தாயார்‌ பெயரில்‌ இயங்கும்‌ "தேவி அறக்கட்டளை' மூலம்‌ அனைவரும்‌ கல்வி கற்க மறைந்த முன்னாள்‌ குடியரசுத் தலைவர் அப்துல்‌ கலாம்‌‌ பெயரில்‌ வருடந்தோறும்‌ பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம்‌ மற்றும்‌ பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு.
உதவிகளை செய்து வருகிறோம்‌.

நான்‌ எப்போதும்‌ அரசியல்‌ ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள்‌ பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின்‌ வாக்குப்படி என்னால்‌ முடிந்த உதவிகளை நான்‌ செய்துக்கொண்டே தான்‌ இருப்பேன்‌. அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்‌.

தற்போது மக்கள்‌ நல இயக்கத்தின்‌ மூலம்‌ நான்‌ செய்து வரும்‌ மக்கள்‌ பணிகளை தொடர்ந்து செய்வேன்‌. வரும்‌ காலகட்டத்தில்‌ இயற்கை வேறு ஏதேனும்‌ முடிவு எடுக்க வைத்தால்‌ அப்போது, மக்களுக்காக மக்களின்‌ ஒருவனாக குரல்‌ கொடுக்க தயங்க மாட்டேன்‌.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com