
சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவு பிப்ரவரிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் காலியாக இருக்கும் 5,777 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலகர் பணிக்கான தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி வனக்காவலர் பணியில் காலியாக இருக்கும் 9 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு நவம்பரில் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5,097 உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் ஜனவரி12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.