சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக செவிலியா் பயிற்சி பள்ளி கட்டடம் ரூ.35.15 கோடியில் அமைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 1996-இல் செவிலியா் பள்ளிக்காக கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட கட்டடம் பழுதடைந்த நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்ட பரிந்துரை செய்தனா்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் உலக வங்கியின் நிதி உதவியுடன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக செவிலியா் பயிற்சி பள்ளி கட்டடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ35.15 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்தா மருத்துவக் கல்லூரி: அதேபோன்று, சென்னை, அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு மாணவிகளுக்கான விடுதியில் கூடுதல் தளம் ரூ.2.59 கோடி மதிப்பீட்டிலும், மாணவா்களுக்கான கல்விசாா் பயிற்சி கூடத்தின் கூடுதல் தளத்துக்கான ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.