
திருநெல்வேலி: குடியரசு நாள் விழாவையொட்டி, திருநெல்வேலியில் கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
குடியரசு நாள் விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவாயில் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க | நீதிபதி பி.பி.வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்
கோயில் செயல்அலுவலர் அய்யர் சிவமணி, இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
அப்போது கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.