தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க மணி தொடர்பாக...

News image

தங்க மணி

Updated On :2 ஏப்ரல் 2025, 11:22 am

DIN

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருள்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

கடந்த மார்ச் 19-ல் நடைபெற்ற அகழாய்வின் போது சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம், இரும்பு மற்றும் ஈயம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.