இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

News image
பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :3 ஏப்ரல் 2025, 5:01 am

DIN

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவமைத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

அவரது நினைவு நாளான மார்ச் 14 ஆம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103 ஆவது பிறந்த நாள்.

மதுரை உசுலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசுலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர்.

அவருக்கு உசுலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.