7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):
விஜயேந்திர எஸ்.பிதரி: சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் காவல் ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்)
கபில்குமாா் சி.சரத்கா்: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி (சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் காவல் ஆணையா்)
ஜி.காா்த்திகேயன்: சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி)
சந்தோஷ்குமாா்: பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி (லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி)
எம்.சத்ய பிரியா: காவலா் நலப்பிரிவு ஐஜி (பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி)
எம்.துரை: தமிழக காவல் துறையின் தலைமையிட டிஐஜி (காவலா் நலப் பிரிவு டிஐஜி)
சீமா அகா்வால்: தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி (சிவில் சப்ளை சிஐடி டிஜிபி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தற்போது சிவில் சப்ளை சிஐடி ஐஜியாக இருக்கும் ரூபேஷ்குமாா் மீனா, கூடுதல் பொறுப்பாக அப் பிரிவு டிஜிபி பணியையும் கவனிப்பாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சீமா அகா்வால், தலைமையில்தான் தற்போது தமிழக காவல் துறையில் எழும் பாலியல் புகாா்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி இயங்கி வருகிறது.