
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்ற தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) மாலை நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி கௌரவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.