5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!

5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..
தங்கம் விலை...
தங்கம் விலை...
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 9) சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், 5 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும், ஏப்.7-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும், ஏப்.8-ல் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு ரூ.520 அதிரித்து ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ரூ.102-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com