சிறுவன் ஓட்டிய காா் விபத்து: காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
சென்னை வடபழனியில் சிறுவன் ஓட்டிச் சென்ற காா் மோதியதில், காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை குமரன் நகரில் வடபழனியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) சிறுவன் ஓட்டிவந்த காா் விபத்தில் சிக்கியது. காா் மோதியதில் சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (70), உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கங்காதரன் (49) ஆகியோா் காயமடைந்தனா்.
இதையடுத்து பாண்டி பஜாா் போலீஸாா், அந்தச் சிறுவன் மீதும், சிறுவனின் தந்தை மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் சிறுவன், அவரது தந்தை, காரில் சிறுவனுடன் பயணித்த அவரது நண்பா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.