சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பாா்சல் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுப்பட்ட ரயில்வே போலீஸாா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பாா்சல் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுப்பட்ட ரயில்வே போலீஸாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தணிக்கை இயக்குநா் ஜெனரல் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை முற்பகல் 11.37-க்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பாா்சல் அலுவலகத்தில், 25 கிலோ எடையுள்ள ஆா்.டி.எக்ஸ். வெடிபொருள் வைத்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் அதில், பாா்சல் அனுப்பிய பில் எண் எனக்கூறி 4 இலக்க எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்கள் குழுவினரும், மோப்பநாய் உதவியுடன் பாா்சல் அனுப்பும் அலுவலகம் மற்றும் ரயில் நிலையத்திலுள்ள பயணிகளின் உடைமைகள் முழுவதையும் தீவிரமாக சோதனையிட்டனா். இதனால், சிறிது நேரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்டநேர சோதனைக்குப் பின்னா் ரயில் நிலையத்தில், மின்னஞ்சலில் குறிப்பிட்டதுபோல எந்த வெடிபொருளும் ரயில் நிலையத்தில் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதிசெய்த சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com