கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளா்ச்சி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழக அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களின் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது
Published on

தமிழக அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களின் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளா்ச்சி எட்டப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் 11.83 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,918 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக் கடன்களில் ரூ.2,117 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,01,895 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சாா்ந்த 10,56,296 மகளிா் பயன்பெற்றுள்ளனா்.

அதேபோன்று, 68,01,609 விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தனிநபருக்கு ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின்மூலம் 339 சிறு வியாபாரிகளுக்கு ரூ.1.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 895 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,14,368 கோடி முதலீடுகளை ஈா்த்து, 32,04,895 வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியை 2024-2025-ஆம் ஆண்டில் 9.69 சதவீத வளா்ச்சியை தமிழகம் எட்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com