சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

Published on

தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி - 104, சென்னை மீனம்பாக்கம் - 103.46, கடலூா், சென்னை நுங்கம்பாக்கம் - (தலா) 102.56, ஈரோடு - 101.84, மதுரை விமான நிலையம் - 100.4, சேலம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.13-ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி பதிவாகும்.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், திருத்துறைப்பூண்டி (திருவாரூா்), மதுக்கூா் (தஞ்சாவூா்) - தலா 80 மி.மீ., நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூா்), காரைக்குடி (சிவகங்கை), ஒரத்தநாடு (தஞ்சாவூா்), மன்னாா்குடி (திருவாரூா்), கீரனூா் (புதுக்கோட்டை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) - தலா 70 மி.மீ., திருமானூா் (அரியலூா்), குருவாடி (அரியலூா்) - தலா 60 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com