அதிமுகவை மிரட்டி பணிய வைத்திருக்கிறது பாஜக: தொல்.திருமாவளவன்

அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க பணிய வைத்து இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன்.
தொல்.திருமாவளவன்.
Published on
Updated on
1 min read

அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க பணிய வைத்து இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க வை பா.ஜ.க. மிரட்டி உருட்டி, பணிய வைத்து கூட்டணி அமைத்து இருப்பதாக அமித்ஷா அறிவிக்கிற நிலையை நாம் இங்கு பார்க்க முடிகிறது. கூட்டணி ஆட்சி அமைப்போம் என அ.தி.மு.க தலைமை அறிவிக்கவில்லை. அ.தி.மு.க வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிற பா.ஜ.க வே அறிவித்து இருக்கிறது. இதைப்பார்க்கும் போது அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா ? இல்லை. பா.ஜ.க தலைமையில் கூட்டணியா ? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்றால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என அறிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் பத்திரிக்கையாளர் அழைத்தது பா.ஜ.க, கூட்டணியை அறிவித்தது பா.ஜ.க, கூட்டணி ஆட்சி என அறிவித்து இருப்பதும் பா.ஜ.க. அப்படியானால் இங்கு அ.தி.மு.கவினர் பங்கு என்ன என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்கள் இதை மனப் பூர்வமாக ஏற்க வாய்ப்பு இல்லை என்று தான் நான் நம்புகிறேன். இந்தக் கூட்டணி ஏற்கனவே உருவான கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. எந்த தாக்கமும் பெரிதாக, தி.மு.க கூட்டணிக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக, எந்த தாக்கமும் ஏற்பட்டு விடாது என்று நான் நம்புகிறேன். செல்லூர் ராஜு போன்ற அ.தி.மு.க வினருக்கே இதில் உடன்பாடு இல்லை.

நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆனது? ஆபாச விடியோவை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

முன்னாள் டி. ஜெயக்குமார் பா.ஜ.க வுடன் கூட்டணி அ.தி.மு.க அமைத்தால், கட்சியில் இருந்து வெளியேறி விடுவேன் என சொல்லக் கூடிய அளவுக்கு, அ.தி.மு.க வின் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்கனவே இருந்தன. ஆனால் அதையெல்லாம் மீறி எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவோடு அமர்ந்து கூட்டணி, அமைத்ததற்கு சாட்சியமாக இருந்து கருக்கிறார். இதில் மற்ற அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதில் செங்கோட்டையன் போன்றோர் அமித்ஷாவை தனியாக சென்று, சந்தித்துப் பேசிய சூழ்நிலைகளும் உருவாகி இருந்தது. அது எதற்காக என்றெல்லாம் நமக்கு தெரியாது.

இவை அனைத்தையும் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, அ.தி.மு.க வுக்கு ஏதோ ஒரு நெருக்கடியை பா.ஜ.க கொடுத்து இருப்பதை நம்மால் கணித்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாக இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com