
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது, இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.