

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஏரளமானோர் நீராடி, முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதேபோல, சென்னையிலும் வடபழனி முருகன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உலகெங்கும் உள்ள தமிழா்களால் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.