
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
விவாதத்தின்போது, கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்கப் பொருள்கள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது, தமிழகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கும் தங்கப் பொருள்கள், பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை மும்பையில் உள்ள அரசு நாணயக் கூடத்தில் உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி, தங்க முதலீட்டு திட்டத்தின்கீழ் வங்கியில் (எஸ்பிஐ) முதலீடு செய்யப்படுகிறது.
இதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம், சம்பந்தப்பட்ட கோயில்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தங்கக் கட்டிகளை முதலீடு செய்வதன் மூலம், ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வட்டி கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தை, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பயன்படுத்தப்படாத மற்றும் பயன்படுத்த இயலாத வெள்ளிப் பொருள்களையும் கட்டிகளாக உருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.