விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு
கோவையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.
கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப, நியாயமான கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அவர்களின் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக கடந்த ஒருவார காலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களை நேரில் சந்தித்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். விசைத்தறி நெசவாளர்களின் ஒருமாத கால வேலைநிறுத்தத்தால், ரூ.1000 கோடிவரையில் உற்பத்தி, 10,000 உரிமையாளர்கள், 3 லட்சம் விசைத்தறி ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், சனிக்கிழமையில் விசைத்தறி நெசவாளர்களின் போராட்டத்தில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததாகத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.