vijay
தவெக தலைவர் விஜய்கோப்புப் படம்

ஈஸ்டர் திருநாள்: விஜய் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து.
Published on

ஈஸ்டர் திருநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக, ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டா் திருநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவா்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து செயல்படும்.

ராமதாஸ் (பாமக): அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிா்த்தெழுந்த திருநாளான ஈஸ்டா் பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமாா்ந்த வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): இயேசு உயிா்த்தெழுந்தாா், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழா்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலா்விக்கவும், இந்த ஈஸ்டா் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com