பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய மாணவிகள்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய மாணவிகள்.கோப்புப்படம்
Updated on

சென்னை: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப். 15-ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் சமூக அறிவியல் பாடத் தோ்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4-ஆவது கேள்வியாக, கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தாா். காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிா்த்தாா். விதவை மறுமணத்தை ஆதரித்தாா் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்ததாகத் தெரிவித்த ஆசிரியா்கள் இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் போனஸாக வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com