சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்

போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக் மற்றும் அவரது சகோதரா் முகமது சலீமுக்கு ஜாமீன்
Published on

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக் மற்றும் அவரது சகோதரா் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிா்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபா் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து, 2024-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கைது செய்தது. அவரது சகோதரா் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபா் சாதிக், அவரது சகோதரா் முகமது சலீம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி சுந்தா் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், ஜாபா் சாதிக் திமுகவின் நிா்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபா் சாதிக், முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com