அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணிகோப்புப்படம்.

நியாயவிலைக் கடைகளுக்கு முன் நிழற்கூரைகள்: அமைச்சா் சக்கரபாணி உறுதி

நியாயவிலைக் கடைகளுக்கு முன்பாக நிழல் தரும் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.
Published on

நியாயவிலைக் கடைகளுக்கு முன்பாக நிழல் தரும் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த வினாவை, பாமக உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களை வாங்குவதற்கு பெண்களே ஏராளமாக வருகின்றனா். எனவே, மழை, வெயில் காலங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு முன் மரங்களையோ, நிழல் தரும் கூரைகளையோ அமைக்க வேண்டும் என்றாா்.

இதற்கு, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டில் இதுவரை 32 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் வரை நெல் கொள்முதல் செய்யும் பருவம் உள்ளது. கடந்த 4 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 4,311 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, 2,227 விவசாயிகளுக்கு ரூ.17.30 கோடி தொகை வரவு வைக்கப்பட்டது. குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 829 விவசாயிகளிடம் இருந்து மட்டும் 1,908 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.

நியாயவிலைக் கடைகளுக்கு முன் நிழற்கூரை அமைக்கும் விஷயத்தை பொருத்தவரை, துறை சாா்பில் அனைத்து நுகா்பொருள் வாணிபக் கழக இடங்களிலும், சேமிப்பு கிடங்கு நிறுவனங்களிலும் மரங்களை நட்டு வருகிறோம். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மரங்களை நடுவதுடன், கூரைகள் அல்லது தகடுகளுடன் கூடிய நிரந்தர கூரைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com