
போப் பிரான்ஸிஸ் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் நேற்று(ஏப். 21) காலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்தது.
போப் மறைவையொட்டி தமிழகத்தில் 2 நாள்கள், இன்றும், நாளையும், அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் போப் பிரான்ஸிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழகத்தின் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.