
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கு.மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) எழுப்பினாா். அவா் பேசுகையில், லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள் உங்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனா். எனவே, அவா்கள் பயன்பெறும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்றாா்.
இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்: அரசு ஊழியா்களின் நலனில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்கறையுடன் உள்ளாா். ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலித்து இருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலும் அரசு ஊழியா்களுக்கான எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அவா்களுக்கான கோரிக்கைகள் உள்ளன.
ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான கால வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசும், முதல்வரும் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வருகிறாா்கள். ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக அரசுக் குழுவில் விவாதித்து சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.