
தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ. 200-க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 7,000- 8,000 என்ற அளவில் இருந்த இ- சேவை மையங்கள் தற்போது 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ்ஆப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அம்மா உணவகம், பேருந்து நிலையங்கள் என பொது இடங்களில் 3,000 இடங்களில் இலவச வை-பை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக சேவை வழங்குவதுபோல தமிழ்நாட்டில் 4,700 பஞ்சாயத்தில் இணைய சேவைக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கும் என்னுடைய கணிப்புப்படி 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.